பயிர் சத்துக்களும் அதன் பயன்களும் .

பயிர் சத்துக்களும் அதன் பயன்களும் 🥰🌱🌱

   பயிர் சத்துக்கள் இரண்டு வகைப்படும் அவை 
  • முதல்நிலை சத்துக்கள்
  • இரண்டாம் நிலை சத்துக்கள்

முதனிலை சத்துக்கள். 🌱🌱👇👇🌾👍

 (பேரூட்டச்சத்துக்கள்- முதனிலைசத்துக்கள் எனப்படும் )

 1 தழைசத்து :

       தரைக்கு மேல்உள்ள தாவர பகுதிகளான தண்டு இலை பூ ,காய்,கனி, ஆகியவற்றின் அளவை பெரிதாக்குவது இலையை பசுமையாக வைத்துக்கொள்ள தழைச்சத்து உதவுகிறது.
      
      பயிரின் வளர்ச்சிக்கு இந்த சத்து இன்றியமையாதது பயிரானது தழைத்து வளர உதவுவதால் இதனைதழைச்சத்து என அழைக்கின்றனர் .

2. மணிச்சத்து :

         தரைக்கு கீழ் உள்ள வேர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது மணிசத்து. பூக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது.

3. சாம்பல் சத்து :

      காய், கனி ,கிழங்கு மற்றும் பயிர்களின்திறத்தை மேம்படுத்த உதவுவதுடன் பயர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது சாம்பல்சத்து.

இரண்டாம் நிலை சத்துக்கள் :

   1. Calcium (சுண்ணாம்பு):

            ஒரு தாவரத்தின் முதுகெலும்பாக இருக்கக்கூடியவை செல்கள் தான் அந்த செல் உருவாவதில் கால்சிஎம் பங்கு இன்றியமையாதது ஒரு செடி சீரான வளர்ச்சி இல்லாமல் ஏதாவது ஒரு பகுதி குட்டையாகவும் மற்றொரு பகுதி வளர்ந்தும் வளர்ச்சியில் இருந்தால் கால்சியம் குறைபாடு உள்ளது என பொருள்.

2.Magnesium :

தாவரத்தின் இலை பகுதிக்கான உணவு தயாரிக்கும் இடம் இலைகளின் பச்சையை உருவாக்கும் குளோரோபில் உருவாக்குவதில் பெரும் பங்கு முக்கியமானது ,போதுமான அளவில் இந்த சத்து கிடைக்காவிட்டால் பயிரில் ஒளிச்சேர்க்கை நடக்காது அதாவது பயிரின் மொத்த வளர்ச்சி பாதிக்கப்படும்.

3 . கந்தகம் :

      தாவரங்களில் புரதச் சத்தை அதிகப்படுத்தும் தேவைப்படுகிறது என்னை தாவரங்கள் அனைத்திற்கும் கண்டால் எண்ணெயில் புரதச் சத்து அதிகமாகும் வேர் வளர்ச்சி அதிகப்படுத்துவதுடன் பயிர்களின் வேர் முடிச்சுகளை உருவாக்கவும்அவசியம்
பயன்படுத்த வேண்டும்.
   

        



              
        
  

Post a Comment

Previous Post Next Post