முருங்கை மரத்தின் வகைகள் ➡️ Drumstick Types 🌱👇
இக்கட்டுரையில் நாம் முருங்கை முருங்கைக்காயின் ரகங்கள் குறித்து காண்போம் ( Drumstick Types ) 🌱👇👇👇
பல்லாண்டு முருங்கை ரகங்கள் :
🌱 யாழ்ப்பாணம் முருங்கை :
தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது யாழ்ப்பாணம் முருங்கை, இந்த ரகம் அதிகமாக காய்க்கும் திறன்் உடையது.
ஓர் மரத்தில் இருந்து சராசரியாக ஆண்டுக்கு 600 காய்கள் வரை கிடைக்கும். ஒரு காய் 60 சென்டி மீட்டர் முதல் 70 செண்டி மீட்டர் வரை நீளம் இருக்கும் ஒரு காயின் எடை சராசரியாக 80 கிராம் அளவு இருக்கும் ஆண்டு முழுவதும் காய்க்கும்.
செம் முருங்கை :
காய் லேசாக சிவப்புு நிறத்தில் இருக்கும். செம் முருங்கை ஆண்டு முழுவதும் காய்க்கக்கூடியது. ஒரு மரத்தில் ஓர் ஆண்டுக்கு 300 காய்கள் வரை கிடைக்கும் ஒரு காய் 60 gram எடை இருக்கும்.
வலையபட்டி முருங்கை :
தேனி உசிலம்பட்டி ஆண்டிப்பட்டி பகுதிகளில் அதிக அளவு சாகுபடி செய்யக்கூடிய ரகம் வலையபட்டி முருங்கை , சிறப்பாக வளரும் இயல்புடையது.
இது ஆண்டு முழுவதும் காய்க்கும் திறன் உடையது
,25 சென்டி மீட்டர் வலரும் 170 கிராம் எடை இருக்கும் ஒரு மரத்திலிருந்து ஓர் ஆண்டுக்கு 1,500 காய்கள் வரை கிடைக்கும்.
மூலனூர் முருங்கை :
கரூர் திருப்பூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் ரகம் மூலனுர் முருங்கைக்காய் .
45 முதல் 50 சென்டிமீட்டர் நீளம் இருக்கும், 120 கிராம் எடையிருக்கும் ஓராண்டில் ஒரு மரத்தில் சராசரியாக 2000 ஆயிரம் முதல் 2,500 காய்கள் வரை இருக்கும் ஓராண்டு முழுவதும் காய்க்கும் 15 ஆண்டுகள் வரை பராமரிக்கலாம்.
காட்டு முருங்கை :
மலை காடுகளில் வளரும்்் முருங்கை . இதுு தேனி அதிகளவில் விளைகிறதுுு .
கரும்பு முருங்கை :
ஒட்டச்சத்திரம் இடையே கோட்டைை பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது கரும்பு முருங்கை.
இந்த ரகம் முருங்கைக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. 🌱🥰👇👇
ஓராண்டு முருங்கை ரகங்கள் :
பிகேஎம் 1 ---இது பெரியகுளம் ரகம் 4 மீட்டர் முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
75 சென்டிமீட்டர் நீளமுள்ளது ஒரு காயின் எடை சராசரியாக 75 கிராம் இருக்கும் ஓர் மரத்தில் சராசரியாக 120 காய்கள் வரை கிடைக்கும் முறையாக பராமரித்தால் ஒரு ஆண்டில் ஒரு எக்டர் நிலத்தில் சராசரியாக 52 டன் மகசூல் கிடைக்கும் .
பிகேஎம் 2 ---- இது பிகேஎம் 1 இரகத்திலிருந்து மேம்பட்ட ரகம். 126 சென்டிமீட்டர் நீளமுள்ளதுகாயின் எடை 250 கிராம் ஒரு மரத்தில் சராசரியாக 250 காய்கள் வரை கிடைக்கும் ஓராண்டில் ஒரு எக்டரில் சராசரியாக 98 டன் மகசூல் கிடைக்கும்.
இவை இரண்டும் நடவு செய்த ஐந்து முதல் ஆறு மாதங்களில் பூ எடுக்கும் ஏழு -எட்டு மாதங்களில் அறுவடைக்கு வரும் வரை ஓராண்டு பயிர் என்று சொன்னாலும் 3 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும்.
முருங்கை நடவு முறை :
காய், இலை, தீவனம் என மூன்று பயன்பாடுகளுக்காக முருங்கை சாகுபடி செய்யப்படும்.
எந்த பயன்பாட்டுக்காக சாகுபடி செய்கிறோமோ அதைப் பொறுத்தே நடவுமுறை வேறுபடும் வயதுக்கேற்ற இடைவெளியும் மாறுபடும்.
காய் தேவைக்காக சாகுபடி செய்யும்போது செடிக்கு செடி 2 மீட்டர் வரிசைக்கு வரிசை 3 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
இலை அறுவடைக்காக நடவு செய்பவர்கள் செடிக்கு செடி 2 மீட்டர் ,வரிசை 3 1/5 இடைவெளியில் நடவு செய்ய வேண்டும் இந்த இடைவெளி அதிகமாக இருக்கும் அதனால் இலை மகசூல் அதிகமாக இருக்கும் காயும் கிடைக்கும்.
தீவனப்பயிர் ஆக நடவு செய்பவர்கள் செடிக்குச் செடி ஒரு மீட்டர் வரிசைக்கு வரிசை 2 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யலாம் இந்த முறையில் செடிகள் பூக்க விடத் தேவையில்லை இலைகள் மட்டும் தான் நோக்கம்.
கீரையாக விற்பனை செய்பவர்கள் இந்த நடைமுறை ஏற்றது.போட்டிக்காக இலையை நடப்பு அறுவடை செய்யும்போது இளம் இலைகளை அறுவடை செய்யக்கூடாது இளம் இலைகளில் பச்சையம் உருவாகி இருக்காது எனவே முருங்கை இலையை அறுவடை செய்ய வேண்டும். 🌱
ஒரு குடும்பத்திற்கு அவசியம் முருங்கை மரம் 🌱🥰👍👍 மரம் நடுவோம் பயன் பெறுவோம் 🌱🌱🌱