ஊடு பயிர் சாகுபடி முறைகள்

 ஊடு பயிர் சாகுபடி முறைகள்  🥰
👍





ஊடுபயிர் சாகுபடி


           மானாவாரி பயிர் சாகுபியில்
ஊடு பயிர் செய்வதால் கூடுதல் வருமானம் கிடைக்கும் . விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் தரக்கூடிய ஊடுபயிர் விவசாயத்தை வகைகளைக் கீழே காண்போம் 🥰👇👇👇


 1. ஊடு பயிர் வகைகள் :

  அ. வரிசை ஊடுபயிர்

              இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பயிர்களை ஒரே நேரத்தில் சாகுபடி செய்தல் இதில் குறைந்த பட்சம் ஒரு பயர் வரிசை விதைப்பில் மேற்கொள்ளப்படும்.

  ஆ. இணை பயிர் சாகுபடி : 

            இரண்டு அல்லது அதிகமான பயிர்களை 3 - 5 வரிசைகளாக இணையாக அடுத்தடுத்து சாகுபடி செய்யும் முறையாகும்.

  இ. கலப்பு பயிர் : 

            மரத்தை விதை பிணை பின்பற்றாமல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்களை வரிசையாக சாகுபடி செய்யும் முறை கலப்பு பயிர் சாகுபடி எனப்படும்.


ஈ . தொடர் ஊடுபயிர் :

         முந்திய பயிரின்விளைச்சல் பருவம் அல்லது அறுவடை சமயம் 🌾 இரண்டாவது பயிரின் விதை மேற்கொள்ளுதல் தொடர் ஊடுபயிர் எனப்படும் 

   
2. ஊடுபயிர் சாகுபடி பயிர் தேர்வு  :

       🌱 ஆழமான வேறு உள்ள பயிருடன் ஆழம் குறைந்த வேர் உள்ள பயிர்களை சாகுபடி செய்தல் ( சோளத்தில் 🌱துவரை ).

      🌱 உயரமான பயறுடன் படரும் வகை உள்ள குறைந்த உயரம் உள்ள பயிர்களை பயிரிடுதல் (நிலக்கடலையில் 🌱 எல்).

      🌱 பிரதான பயிர்களுடன் தழைச்சத்து தரும் பயிர் வகைகளை பயிர் சாகுபடி செய்தல்.( மக்காச்சோளத்தில் தட்டைப்பயிர்) (பருத்தியில்🌱 
தட்டைப்பயிர்)

      🌱 மண் அரிமானத்தை தடுக்கும் பயிர் வகைகளை பிரதான பயிருடன் பயிர் செய்தல்.

      🌱 பரஸ்பர நன்மை பயக்கும் குறைந்த போட்டி உள்ள பயிர்களை ஊடு பயிர்களாக சாகுபடி செய்தல். (நிலக்கடலையில் 🌱 உளுந்து)
         
      🌱 பூச்சி மற்றும் நோய் பரவலைத் தடுக்க ஊடுபயிர் சாகுபடி செய்தல்.

    🌱 நிலக்கடலையில் சுருள் பூச்சியை கட்டுப்படுத்த கம்பு ஊடுபயிர்.

    🌱 பருத்தியில் காய் புழுவை கட்டுப்படுத்த தட்டை பயறு.

    🌱 மண் வளங்களுக்கு ஏற்ற ஊடுபயிர் செம்மண் நிலத்தில் சோளத்தில் ஊடுபயிராக தட்டைப்பயிர் அல்லது உளுந்து பயிறு உகந்தது.

    🌱 கரிசல் மண் நிலங்களில் சோளம் -துவரை பச்சைப்பயறு பயிர் நிலக்கடலையில் -ஆமணக்கு மக்காச்சோளத்தில் துவரை ஊடுபயிர் சாகுபடி உகந்தது.
           
            click  👇👇👇 🌾🌱🌱


Post a Comment

Previous Post Next Post