மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகள்

 மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகள் : 

 💧 தடுப்பணைகள் :

        ஓடைகளின் குறுக்கே தடுப்பு ஏற்படுத்தி மழைநீர் சேமிப்பு செய்யவும் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் தடுப்பணைகள் அமைக்கப்படுகிறது.

 பயன்கள் : 
       மழை பெய்யும்போது ஓடையின் மழை நீரானது பெருக்கெடுத்து ஓடி வீணாவது தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுகிறது 

சேமிக்கப்படும் நீர் சுற்றி உள்ள மானாவாரி நிலங்களில் பாசனத்திற்கு பயன்படுகிறது மேலும் தேங்கும் மழைநீர் நிலத்தில் ஊடுருவி சுற்றியுள்ள நிலப்பரப்பில் உள்ள மண்ணின் ஈர தன்மையை அதிகரிக்கிறது .


எனவே பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஈரப்பதம் காக்கப்படுகிறது மழை நீர் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கிறது.

💧 பண்ணை குட்டை :

         விவசாய நிலங்களில் மேல் பகுதிகளில் இருந்து வழிந்து ஓடும் வரும் மழைநீர் தாழ்வான பகுதிகளில் சேகரித்து வைக்கும் அடிப்படை கட்டமைப்புகளை பண்ணை குட்டைகள் ஆகும்.

 பயன்கள்  :

      வறட்சி காலங்களில் பயிர்களுக்கு உயிர் பாசனம் அளிக்க பண்ணை குட்டைகளில் சேமிக்கப்படும் நீர் மிகவும் உதவுகிறது ,முன்னோடி விவசாயிகள் பண்ணை குட்டைகள் மீன் வளர்ப்பில் பயன்படுகிறது இது அவர்களின் உபரி வருமானத்துக்கு வழி வகுக்கிறது.
  
     💧🌱 மழைநீர் சேகரிப்பு 🥰🌱💧
      

Post a Comment

Previous Post Next Post