கொரோனா - வங்கியின் புதிய அறிவிப்பு

  

    🏧 💵வங்கியின் புதிய அறிவிப்பு கொரோனா தடுப்பு ஊசி போட்டவர்களுக்கு கூடுதல் வட்டியுடன் சிறப்பு திட்டம்....👇👇👍

Corona vaccine

மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசு சில நடவடிக்கை எடுத்து வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வங்கி பிக்ஸட் டெபாசிட் வட்டியைக் கூடுதலாகத் தரும் விதமாக "Central Bank of India" புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது.


இந்த அறிவிப்பின்படி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்காக பிரத்யேகமாக 'Immune India deposit scheme' என்கிற புதிய சேமிப்புத் திட்டத்தை இந்த வங்கி அறிமுகம் செய்திருக்கிறது. மற்ற பிக்ஸட் டெபாசிட் போலத்தான், இந்த பிரத்யேக டெபாசிட் திட்டமும் செயல்படும் என்றாலும், 1,111 நாள்கள் முதிர்வுக் காலம் கொண்ட இந்த பிக்ஸட் டெபாசிட் சேமிப்புத் திட்டத்தில், வழக்கமான வட்டி விகிதத்தைவிட கூடுதலாக 0.25% வட்டியை வாடிக்கையாளர்கள் பெறலாம்.


மூத்த குடிமக்கள் 0.50% வட்டியை கூடுதலாகப் பெறமுடியும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வாடிக்கையாளர்கள் இந்த சேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. இந்த சலுகையானது குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும்தான் என 'சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா' ( Central Bank of India )👍👇👇🙂


தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post