நீச்சல் பயிற்சியின் நன்மைகள் 💙

 நீச்சல் பயிற்சியின் நன்மைகள் 💙✨



நீச்சல் பயிற்சியின் நன்மைகள்

🧡 உடலை உறுதியாக்கும் நீச்சல் பயிற்சி 🥰🔥🔥🔥

      உடலின் அனைத்து தசைகளும் ஒரே நேரத்தில் செயல்பட வைப்பது நீச்சல் ஆகும். எல்லா வயதுப் பெண்களும்் நீச்சல் கற்றுக் கொள்ளலாம் .

       வயதானவர்கள் கர்ப்பிணிகள் குழந்தைகள் என அனைவரும் செய்யக்கூடிய பயிற்சியில் நீச்சல் பயிற்சி பிரதானமாக உள்ளது.
 
       உடல் பருமனை குறைக்க உதவும் பயிற்சிகளில் நீச்சல் முக்கியமானதாக கருதப்படுகிறது சராசரியாக ஒரு மணி நேரம் பெண்கள் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது அவர்களின் உடலில் 400 கலோரிகள் எரிக்கப்படுவதால் ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன .

 இதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து எடையை சீராகிறது தினமும் நீச்சல் பயிற்சி செய்பவர்களுக்கு வயிற்று சேர்ந்த தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.

    மெனோபாஸ் காலங்களில் உடல் சோர்வு ,எதிலும் ஈடுபாடு ஏற்படாத மன நிலை கவலை போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும் இந்த சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக நீச்சல் பயிற்சி அமைகிறது 🥰.

      தினமும் அரை மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் மனம் லேசாகிறது நீந்தும்போது மனச் சிதறல் நீங்கி மனம் ஒருநிலை அடைகிறது அமைதி ஏற்படும் அதன் மூலம் இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும். 

      🌟 நீச்சல் பயிற்சியில் ஈடுபடு வதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகள் சீராகும் செயல்படும்.

      💙  பிரசவத்துக்கு தயாராகும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் பிரசவகால நெருக்கடிகள் அகன்று சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் அமையும் என ஆய்வுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

      💙  நீச்சல் நல்ல மூச்சு பயிற்சியாக அமைகிறது .  அதன்்்் மூலம் நுரையீரல் வலுப்பெற்றுல் சுவாச பிரச்சனைகள் நீங்குவதோடு மன அழுத்தமும் குறைகிறது.

     💙   நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது இதயம் சீராக இயங்குவதால் ரத்த ஓட்டம் சீராகும் அதன் மூலம் முதுகு , தண்டுவடம் வலுப்பெறுகின்றன . நீச்சல் பயிற்சி காரணமாக குடல் இயக்கம் சீரடைந்து செரிமான சக்தி தூண்டப்பட்டு அஜீரண கோளாறு அகன்று. 
 
            பசி தூண்ட செய்வதுடன் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது . 

    💙 நீச்சல் பயிற்சி என்பது அனைவரும் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பயிற்சியாகும் . ஆபத்து காலங்களில் இப்பயிற்சி நமக்கு பேருதவியாக அமையும் நீச்சல் கற்று வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் இக்காலங்களில் 🌟💙🙏






          

Post a Comment

Previous Post Next Post